சென்னை: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரில் ஸ்ட்ரைக்கில் இருந்த ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் உடன் விளையாடிய போது சிங்கிள் கொடுக்க மறுத்தார். அதனை கவனித்த ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதற்கு எதிராக தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. டாஸை இழந்து முதலில் பேட் செய்த இந்தியா 211 ரன்கள் எடுத்தது. இஷான் கிஷன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா போன்ற பேட்ஸ்மேன்கள் இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடி ரன் குவித்தனர்.

இருந்தாலும் இந்தியா பேட் செய்த கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை தினேஷ் கார்த்திக் வசம் கொடுக்க மருத்துவர் ஹர்திக் பாண்டியா. அதை கவனித்த ரசிகர்கள் அது குறித்து ட்விட்டர் தளத்தில் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டிருந்தார் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது.

“அவர் டிகே. டெயில் எண்டர் கிடையாது”, “ஹர்திக், 15-வது ஐபிஎல் சீசனில் சிறந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருந்த பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக்”, “சிறப்பாக விளையாடினீர்கள் ஹர்திக். இருந்தாலும் டிகே-வுக்கு பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்பது தெரியும்” என்பது போன்ற பதிவுகளை பதிவு செய்திருந்தனர் ரசிகர்கள்.

— Maddy (@EvilRashford) June 9, 2022

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!