புதுடெல்லி: இந்தியாவின் முதல் விர்ச்சுவல் இன்ஃப்ளூயன்சர் ‘கைரா’ இப்போது இன்ஸ்டாகிராமில் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது. கடந்த ஜனவரி 28-ஆம் தேதியன்று உருவாக்கப்பட்ட கைராவின் வயது 21. இதைக் கேட்கவே ஆச்சரியமாக இருக்கலாம். கைரா குறித்த கூடுதல் விவரம்:

சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இன்றைய டிஜிட்டல் காலத்தில் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் (Influencer) என்பது குறித்து பலரும் கேள்விப்பட்டிருப்போம். சமூக வலைதளத்தில் பல்வேறு பொருட்களை சந்தைப்படுத்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூவன்சர்கள் உதவுகிறார்கள். அதாவது, மற்ற பயனர்களை ஏதேனும் ஒரு பொருளை வாங்க தூண்டுவது தான் இவர்களது பணி. அதற்கு முதலில் சமூக வலைதளத்தில் அவர்கள் பிரபலமானவர்களாக இருக்க வேண்டும்.

இந்தியாவில் இந்தப் பணியை செய்து வருகின்ற ஒரு நிறுவனம் தான் டாப் சோஷியல் இந்தியா. சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர் மற்றும் நிறுவனங்களுக்கு இடையே பாலமாக இயங்கி வருகிறது இந்த நிறுவனம்.

இந்த நிறுவனத்தின் வணிகப் பிரிவு தலைவராக இயங்கி வருகிறார் ஹிமான்ஷு கோயல். இவர்தான் கைராவுக்கு விர்ச்சுவல் உலகில் உயிர் கொடுத்தவர். கைராவை இன்ஸ்டா தளத்தில் 96000 பேர் ஃபாலோ செய்து வருகின்றனர்.

நடனம், பாடல், பேசுதல் என அனைத்து பணிகளையும் கைரா செய்வார். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நடனம் ஆடுவது தொடங்கி மாடல் போல போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுக்கும் பணியையும் கைரா செய்வார். இவரை விர்ச்சுவல் உலகில் வாழும் நபர் என சொல்லலாம். அவரின் வீடியோ மற்றும் போட்டோ இங்கே…Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!