புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 30 ஸ்மார்ட்போன். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா நிறுவனம். அண்மைக் காலமாக வரிசையாக ஸ்மார்ட்போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், எட்ஜ் 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் எட்ஜ் 30 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக எட்ஜ் 30 புரோ அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகின் மெல்லிய (Thin) போன் இது என எட்ஜ் 30 பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது.

எட்ஜ் 30: சிறப்பு அம்சங்கள்

>6.7 இன்ச் டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த போன்.

>குவால்காம் ஸ்னாப்டிராகன் 778+ 5ஜி புராசஸரை கொண்டுள்ளது இந்த போன். இந்தியாவில் முதல் முறையாக இந்த புராசஸர் கொண்ட போன் வெளியாகி உள்ளது.

>இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளில் இந்த போன் வெளிவந்துள்ளது. 6ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் திறன் இதில் உள்ளது.

>4020mAh பேட்டரி இடம் பெற்றுள்ளது. 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது.

>ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இந்த போன் இயங்குகிறது. மூன்று ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 & 14 அப்டேட் வசதியும் இதில் உள்ளதாம்.

>பின்பக்கத்தில் மூன்று கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 50 மெகாபிக்சல் அல்ட்ரா வொய்ட் கேமரா இடம் பெற்றுள்ளது.

>முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது.

>5ஜி பேண்ட் இணைப்பு வசதியும் இதில் உள்ளது.

6ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை 27,999 ரூபாய்க்கும், 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை 29,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19-ஆம் தேதி முதல் போன் விற்பனை ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!