கட்டண அம்சங்களுடன் கூடிய ப்ரீமியம் சந்தா திட்டத்தை இந்த மாதத்தின் இறுதியில் அறிமுகம் செய்ய டெலிகிராம் திட்டமிட்டுள்ளது. இதனை அந்த நிறுவனத்தின் நிறுவனர் பாவெல் துரோவ் உறுதி செய்துள்ளார்.

இன்ஸ்டான்ட் மெசேஜிங் தளமாக டெலிகிராம் செயலி இயங்கி வருகிறது. கடந்த 2013 வாக்கில் இந்த செயலி அறிமுகமானது. உலகம் முழுவதும் லட்ச கணக்கிலான மக்கள் டெலிகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த மாதம் டெலிகிராம் ப்ரீமியத்தின் பீட்டா வெர்ஷன் அடையாளம் காணப்பட்டது. இதில் புதிய அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருக்கும் என்றும். அதன் மூலம் பயனர்களுக்கு தனித்துவமிக்க அனுபவம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக மற்ற மெசேஜிங் செயலிகளை காட்டிலும் பயனர்களுக்கு கூடுதல் அம்சம் இதில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெலிகிராம் செயலியில் அறிமுகம் செய்யப்படும் புதிய அம்சங்களை முன்கூட்டிய பயன்படுத்துவது, பெரிய அளவிலான ஃபைல்களை அப்லோட் செய்வது, ப்ரீமியம் பயனர்களால் மட்டுமே பயன்டுத்த முடியும் வகையிலான ப்ரீமியம்-ஒன்லி ஸ்டிக்கர்ஸ் மற்றும் ரியாக்‌ஷன்ஸ் போன்றவை சந்தா செலுத்தும் பயனர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலவசமாக சந்தா எதுவும் செலுத்தாமல் டெலிகிராம் தளத்தை பயன்படுத்தும் பயனர்கள் வழக்கம்போல அதனை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தா செலுத்திய பயனர்கள் பதிவு செய்துள்ள பெரிய அளவிலான ஃபைல்களை இலவசமாக பயன்படுத்துபவர்கள் அக்செஸ் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!