சென்னை: மாநில அளவிலான பூப்பந்துப் போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் எண்ணூர், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் முன்னாள் மாணவர்கள் பூப்பந்தாட்ட கிளப் சார்பில் மாநில அளவிலான 4-ம் ஆண்டு பூப்பந்துப் போட்டி கடந்த 11 மற்றும் 12-ம் தேதிகளில்ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் எண்ணூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணி 30-35, 35-30, 35-29 என்ற செட் கணக்கில் மதுரை ஒசிபிஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியை தோற்கடித்து முதலிடம் பெற்றது. வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கேடயம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!