செய்திப்பிரிவு

Last Updated : 29 May, 2022 04:00 AM

Published : 29 May 2022 04:00 AM
Last Updated : 29 May 2022 04:00 AM

சென்னை

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மறுவாய்ப்பு வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வியாண்டு முதல் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு (சியுஇடி) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான சிஇயுடி தேர்வு ஜூலை முதல் வாரத்தில் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) மூலம் தமிழ், இந்தி உட்பட13 மொழிகளில் கணினி வழியில் நடத்தப்படவுள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 7-ல் தொடங்கி மே 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வுக்கு 11.5 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 9.14 லட்சம்பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி இருந்தனர். இந்நிலையில் பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று சியுஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க என்டிஏ தற்போது மறுவாய்ப்பு வழங்கியுள்ளது.

புதியவர்களுக்கு வாய்ப்பு

இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளம் வழியாக மே 31-ம் தேதி வரை விண்ணப்பப்பதிவு செய்யலாம். இந்த வாய்ப்பை புதியவர்கள் மற்றும் ஏற்கெனவே விண்ணப்பிக்க முடியாதவர்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011 40759000 என்ற தொலைபேசி எண் மூலம் உதவி மையத்தை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!