கல்விக் கடன்: வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு பல்வேறு வகையான உதவித் தொகைகளும், கல்விக் கடன்களும் கிடைக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டுக் கல்விக்காக கடன் தருவதற்கு வங்கிகள் இருக்கின்றன. அதனால் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்கூட வெளிநாட்டுக் கல்வி கற்க முடியும்.

வெளிநாடு சென்று படிக்கும் 70 சதவீத மாணவர்கள் வங்கிக் கடன் பெற்று கல்வி கற்கிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டுமின்றி பிஎச்டி போன்ற ஆய்வு படிப்புகளை தொழில்துறை நிறுவனங்களோடு இணைந்து கற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது.

வெளிநாடுகளில் கல்வி பெற கல்விக் கடன் ஒருபுறம் என்றால் கடன் வாங்கும்போது அதனை திருப்பிச் செலுத்த போதுமான நிதி சூழல் இல்லாத நிலையில் பலரும் இந்த வாய்ப்பை தவறவிட்டு விடுகின்றனர். குறிப்பாக பட்டப்படிப்புகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று திறனுடன் இருப்பவர்கள் பலர் வெளிநாடுகளில் முதுநிலை பட்டப்படிப்பு பயில விரும்புகின்றனர்.

உதவித்தொகை: ஆனால் அவர்கள் குடும்பத்தில் கல்வி கடன் பெறும் சூழல் இல்லாத நிலையில் அவர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவித் தொகைகள் கைகொடுக்கின்றன. மாணவர்கள் தங்கள் படிப்பிற்கு ஆகும் செலவை பல்வேறு வகைகளில் பெறலாம். அதாவது ஒரளவு கடன் பெறுபவர்கள் கூட அவர்களுக்கு கல்வி உதவித் தொகை விளங்குகிறது.

இதுபோன்ற இளைஞர்களுக்கு குடும்ப சூழலை மாற்றவும் கல்வி மூலம் ஏற்றம் பெறவும் முதுநிலை படிப்பபை தொடர கல்வி உதவித் தொகைகள் பெரும் உதவி புரிகின்றன. ஆனால் இந்த மாணவர்கள் இதுகுறித்த போதுமான தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பல்வேறு வாய்ப்புகள்: உதவித் தொகை என்பது மாணவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள், தொண்டு நிறுவனங்கள், வெளிநாட்டு அரசுகள், ஐக்கிய நாடுகள் சபை, காமன்வெல்த் கூட்டமைப்பு, உலகவங்கி என பல அமைப்புகள் கல்வி உதவித் தொகைகளை வழங்கி வருகின்றன.

படிக்கும் மாணவர்களின் கல்வித் திறன், இனம், நாடு, எடுத்திருக்கும் படிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு உதவித் தொகைகள் வழங்கபடுகின்றன. பெரிய பெரிய நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் கூட கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றன.

இதில் இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒருவர் குறிப்பிட்ட நிறுவனத்திடம் கல்வி உதவித் தொகையை பெற்று மேற்படிப்பை முடித்து விட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நல்ல பணிகளில் சேர முடியும். சில நிறுவனங்கள் மாணவர்களின் உதவிக்காக தனியாக கல்வி உதவித் தொகையை வழங்குகின்றன.

சர்வதேச உதவித்தொகை: இந்திய மாணவர்களுக்கு சர்வதேச கல்வி உதவித்தொகையும் கிடைக்கிறது. வெளிநாட்டில் படிப்பதற்கான ஒட்டுமொத்த செலவை தரும் வகையில் மிகப்பெரிய நிவாரணமாக இந்த கல்வி உதவித் தொகைகள் உள்ளன. உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்திய மாணவர்களுக்கு வெவ்வேறு அளவுகளில் வெளிநாட்டில் படிக்க வெளிநாட்டு உதவித்தொகைகளை வழங்குகின்றன. முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கு பெரும்பாலான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. எனினும் இந்திய மாணவர்களுக்கான பல இளங்கலை உதவித்தொகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சர்வதேச மாணவர்கள் தங்கள் நாட்டிற்கு கொண்டு வந்து அவர்களை கற்க செய்வது மட்டுமல்லாமல் அவர்களது திறனை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறனின் முக்கியத்துவத்தை உலகெங்கிலும் உள்ள நாடுகள் புரிந்து கொண்டு அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிகள் செய்கின்றன. பல்கலைக்கழகங்கள், அரசுகள், தனியார் நிறுவனங்கள் சர்வதேச மாணவர் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன.

> இது, ‘இந்து தமிழ் திசை’ ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க – டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!