செய்திப்பிரிவு

Last Updated : 16 Jun, 2022 07:45 AM

Published : 16 Jun 2022 07:45 AM
Last Updated : 16 Jun 2022 07:45 AM

சென்னை

தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மே 6 முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. 9.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வெழுதினர். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 2-ல் தொடங்கி 10-ம் தேதியுடன் முடிவடைந்தன.

தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றன. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஜூன் 17-ம் தேதி காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் இணையதளம் வழியாக வெளியிடப்படும்.

அதன் விவரங்களை http://www.dge.tn.gov.in/, http://www.tnresults.nic.in/ உள்ளிட்ட வலைதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் மதிப்பெண், செல்போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும். பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்’’ என்றனர்.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!