மும்பை: இந்திய மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து மிதாலி ராஜ் ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் இதில் அடங்கும்.

இந்தத் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கிறார் ஹர்மன்பிரீத். இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. வரும் 23-ஆம் தேதி இந்தத் தொடர் ஆரம்பமாகிறது.

இலங்கை தொடருக்கான அணி விவரம்:

டி20 அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), எஸ் மேக்னா, தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், சிம்ரன் பகதூர், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் , ஜெமிமா ரோட்ரிக்ஸ், ராதா யாதவ்.

ஒருநாள் அணி: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, யஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), எஸ் மேக்னா, தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட், சிம்ரன் பகதூர், ரிச்சா கோஷ், பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் , தானியா பாட்டியா, ஹர்லீன் தியோல்.

ஹர்மன்பிரீத், இந்திய அணிக்காக 108 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இது தவிர 120 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!