சென்னை: தமிழக அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள நகராட்சி ஆணையர், சார் பதிவாளர், உதவி பிரிவு அதிகாரி, தணிக்கைஆய்வாளர், மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி போன்ற5,529 முக்கிய பதவிகளை உள்ளடக்கிய குரூப்-2 பணியிடங்களுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வரும் 21-ம் தேதி நடத்த உள்ளது.

இந்த தேர்வில் பங்கேற்பவர் களுக்கு உதவும் வகையில் இலவச மாதிரி தேர்வை சத்யா ஐஏஎஸ் அகாடமி வரும் 15-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை9 மணி முதல் 12 மணி வரைதமிழகத்தின் பல்வேறு முக்கியநகரங்களிலும் நடத்த உள்ளது.சென்னை, ஈரோடு, கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, தஞ்சாவூர், கடலூர், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் ஒரே நேரத்தில் இத்தேர்வு நடத்தப்படும்.

தேர்வு முடிந்தவுடன் தமிழக அளவிலான ஒட்டுமொத்த தரவரிசை பட்டியல், வகுப்பு வாரியாக தரவரிசை பட்டியல் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான மென்பொருள் செயலிவடிவமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

மாநில அளவில் நடத்தப்படும் இந்த இலவச மாதிரி தேர்வை, நேரில் தேர்வு மையங்களுக்கு வந்து எழுத முடியாதவர்கள் ஆன்லைனில் எழுதலாம்.

இத்தேர்வில் பங்கேற்பவர்களுக்கு, வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள குரூப்-2 மெயின் தேர்வுக்கான பயிற்சியில் சிறப்பு கட்டணச் சலுகை வழங்கப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு பயிற்சி முற்றிலும் இலவசம். இந்த இலவச மாதிரி தேர்வில் பங்கு பெற விரும்புவோர் www.sathyaias.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 0424-2226909, 0424-3558373, 7401521948 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!