Last Updated : 08 Jun, 2022 06:03 AM
Published : 08 Jun 2022 06:03 AM
Last Updated : 08 Jun 2022 06:03 AM

புதுடெல்லி: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளிடையே 5 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
இதன் முதல் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை இரவு நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்கள் 94 சதவீதம் விற்று தீர்ந்துவிட்டதாக டெல்லி கிரிக்கெட் சங்க இணைச் செயலாளர் ராஜன் மஞ்சந்தா தெரிவித்துள்ளார். நேரடி விற்பனைக்காக ஒதுக்கப்பட்ட 27 ஆயிரம் டிக்கெட்களில் 400 முதல் 500 டிக்கெட்கள் மட்டுமே உள்ளதாம். அருண் ஜெட்லி மைதானத்தில் 35,000 பேர் அமர்ந்து போட்டியை பார்க்கலாம். இங்கு கடைசியாக கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதன் பின்னர் தற்போதுதான் போட்டி நடைபெற உள்ளது.