சென்னை: புதிய கல்வியாண்டில் (2022-23) தொழில்நுட்பக் கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) கல்வி மற்றும் திட்டமிடல் பிரிவுஆலோசகர் ரமேஷ் உன்னிகிருஷ்ணன், அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளதால் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்வதாக மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
கரோனா தொற்று பரவல்பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டாலும், அதன் தாக்கம் முழுமையாக விலகவில்லை. இதையடுத்து கரோனா தடுப்புதொடர்ந்து முழு ஆர்வத்துடன்பின்பற்ற வேண்டியது அவசியமாகும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமிநாசினி பயன்பாடு, தனிநபர் இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
இதுதவிர மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட யாருக்கேனும் தொற்று அறிகுறி இருப்பின் அவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். குடும்ப உறுப்பினர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் கல்லூரிக்கு வர அனுமதிக்கக்கூடாது. அதேபோல், திறந்தவெளியில் எச்சில் துப்புவதற்கும், வளாகத்தில் கூட்டம் கூடவும் தடை விதித்தல் என்பனஉட்பட வழிமுறைகள் கட்டாயம்பின்பற்றப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி பயன்பாடு, தனிநபர் இடைவெளி ஆகியவற்றை கடைப் பிடிக்க வேண்டும்.