தேசத் தந்தை மகாத்மா காந்தி, ‘‘இந்தியாவின் ஆன்மா அதன் கிராமங்களில் வாழ்கிறது’’ என்று 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவித்தார். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 74% இந்தியர்கள் 6,38,365 கிராமங்களில் வாழ்கின்றனர்.

கிராமப்புற வறுமையைப் போக்குதல், கிராமப்புற மக்களின் பொருளாதார நல்வாழ்வை மேம்படுத்துதல், வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரித்தல், கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சமூக பாதுகாப்பு வலையை வழங்குதல் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தும் வகையில், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MoRD) பல முனை உத்திகளை எடுத்து வருகிறது. கிராமப்புற இளைஞர்களின் திறன், உள்கட்டமைப்பு மேம்பாடு, நில உற்பத்தியை அதிகரிப்பது போன்றவை ஊரக வளர்ச்சித் துறை திட்டங்கள் மூலம்,அதாவது மகாத்மா காந்தி தேசியஊரக வேலை உறுதி திட்டம் (MGNREGS), தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM), தீன் தயாள் உபாத்யாய் – கிராமின் கவுசல்யா யோஜனா (DDU-GKY), பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா – கிராமின் (PMAY-G), பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY), சியாமபிரசாத் முகர்ஜி தேசிய RuRBAN மிஷன் (SPMRM) மற்றும் தேசிய சமூக உதவி திட்டம், மற்றும் நிலவளத் துறையின் திட்டங்கள், அதாவது, பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனாவின் (Watershed Development Component of Pradhan Mantri Krishi Sinchai Yojana-WDC-PMKSY) நீர்நிலை மேம்பாட்டுக் கூறுகள் ஆகியவை மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

கிராமப்புற வளர்ச்சி

ஊரக வளர்ச்சி அமைச்சகம் அனைத்து கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களையும் முறையாக செயல்படுத்த முக்கியத்துவம் அளிக்கிறது. திட்டத்தின் பலன்கள் கிராமப்புற ஏழைகளை சென்றடைவதை உறுதிசெய்ய, செயல்திறன் மதிப்பாய்வுக் குழு கூட்டங்கள், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு உள்ளிட்ட கிராமப்புறவளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிப்பதற்கும் மதிப்பீடு செய்வதற்கும் விரிவான பல-நிலை மற்றும் பல வடிவ அமைப்பை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. கண்காணிப்புக் குழு (District Development Co-ordination and Monitoring Committee-DISHA) கூட்டங்கள், தேசிய அளவிலான கண்காணிப்பாளர்கள் (National Level Monitors -NLM), பகுதி அலுவலர்கள் திட்டங்கள், பொதுவான மறுஆய்வு பணி, ஒரே நேரத்தில் மதிப்பீடு மற்றும் தாக்க மதிப்பீட்டு ஆய்வுகள். சமூக தணிக்கைகள் மகாத்மா காந்தி NREGS மற்றும் PMAY-G போன்ற சில திட்டங்களால் நடத்தப்படுகின்றன.

அறிக்கைகள் கண்காணிப்பு

திட்டங்களின் மூன்றாம் தரப்பு மதிப்பீடும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. கண்டுபிடிப்புகளின்மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுதவிர, பரிவர்த்தனை அடிப்படையிலான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் மதிப்பாய்வுகளும் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், அமைச்சகம் பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதையும், திட்டங்களை செயல்படுத்தும் நிலை குறித்து ஊடகங்களில் வரும் அறிக்கைகளையும் கண்காணிக்கிறது.

தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா

2011-ல் தொடங்கப்பட்ட தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா – தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM) சுமார் 9-10 கோடி கிராமப்புற ஏழைக் குடும்பங்களை சுயஉதவிக் குழுக்களாக (SHGs) கட்டம் கட்டமாகத் திரட்டி, அவர்களுக்கு நீண்டகால ஆதரவை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அவர்களதுவாழ்வாதாரத்தை பல்வகைப்படுத்துதல், அவர்களது வருமானம், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துதல் இதன் நோக்கம்.

கிராமின் கவுசல்யா யோஜனா

கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் (MoRD) தீன்தயாள் உபாத்யாய் கிராமின் கவுசல்யா யோஜனா (DDU-GKY) திட்டமானது தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NRLM) ஒரு பகுதியாகும், இதுஇரட்டை நோக்கங்களைக் கொண்டுள்ளது. கிராமப்புற ஏழைக் குடும்பங்களின் வருமானத்தில் பன்முகத்தன்மையை சேர்ப்பது மற்றும் கிராமப்புற இளைஞர்களின் தொழில் தேவைகளை பூர்த்தி செய்வது.

கிராம் சதக் யோஜனா

பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (PMGSY) என்பது மத்திய அரசின் திட்டமாகும். இதன் முதன்மை நோக்கம், இதுவரை இணைப்பு வசதி இல்லாத கிராமங்களுக்கு, அனைத்து வானிலைக்கும் ஏற்ற சாலை வசதியை ஏற்படுத்தி தருவதாகும். மலை மாநிலங்கள் (வடகிழக்கு, சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரகண்ட்) மற்றும் பாலைவன பகுதிகள் (பாலைவன மேம்பாட்டு திட்டத்தில் அடையாளம் காணப்பட்டவை) மற்றும் பழங்குடியினர் (அட்டவணை V) பகுதிகளை பொறுத்தவரை, 250 நபர்கள் மற்றும் அதற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகளை இணைக்கும் வகையில் சாலை வசதி செய்யப்படுவதன் இதன் நோக்கம்.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!