மும்பை: “நம் அணிக்கு ரன்கள் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் அவுட்டாகி விடுவார்கள்” என இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித், கோலி மற்றும் கே.எல்.ராகுல் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி வரும் வியாழன் முதல் இந்த ஆண்டு இறுதி வரையில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் என அனைத்து போட்டிகளும் இதில் அடங்கும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சீனியர் வீரர்கள் கேப்டன் ரோகித், கோலி மற்றும் பும்ரா போன்றவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. முழுவதும் இளம் வீரர்களை கொண்ட அணியுடன் களம் இறங்குகிறது இந்தியா.