சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மொத்தம் 5,642 மாணவ, மாணவிகள் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை எழுதினர். இதில் 4,882 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; தேர்ச்சி விகிதம் 86.53 சதவீதம் ஆகும்.

மதிப்பெண் அடிப்படையில் 47 மாணவ, மாணவிகள் 551 மதிப்பெண்களுக்கு மேலும், 164 பேர் 501 முதல் 550 மதிப்பெண்கள் வரையிலும், 382 பேர் 451 முதல் 500 மதிப்பெண்கள் வரையிலும் பெற்றுள்ளனர்.

அதேபோல் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 6,448 மாணவ, மாணவிகள் எழுதினர். இதில் 4,890 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; தேர்ச்சி விகிதம் 75.84 சதவீதம் ஆகும். 24 மாணவ, மாணவிகள் 451 மதிப்பெண்களுக்கு மேலும், 148 பேர் 401 முதல் 450 மதிப்பெண்கள் வரையிலும், 359 பேர் 351 முதல் 400 மதிப்பெண்கள் வரையிலும் பெற்றுள்ளனர். சென்னையில் 10-ம் வகுப்பு பொது தேர்வில் சூளைமேடு சென்னை உயர்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று முதல் இடம் பெற்றுள்ளது.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!