சென்னை: தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் மாநிலம் முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட இளங்கலை முதலாம் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை (ஜுன் 22) முதல் ஜூலை 7-ம்தேதி வரை www.tngasa.in மற்றும் www.tngasa.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, வரும் 27-ம் தேதிஇணையதளத்தில் விண்ணப்பப்பதிவு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதால், 5 நாட்கள் முன்னதாகவே இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், அவரவர் படித்த பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம் முழுவதும் உயர் கல்வித்துறையால் அமைக்கப்பட்டுள்ள 110 சிறப்பு உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.48, பதிவுக் கட்டணமாக ரூ.2 நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. பட்டியலின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. ஆனால், பதிவுக் கட்டணமாக ரூ.2 மட்டும் வசூலிக்கப்படும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. விண்ணப்பக் கட்டணம் மற்றும்பதிவு கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் ‘டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அல்லது இணையதள வங்கி’ சேவை மூலம் செலுத்தலாம்.

இணையதளம் மூலமாக கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்கள் மூலம் ‘The director, directorate of collegiate education, chennai-6’ என்ற முகவரிக்கு வருகிற 27-ம் தேதி அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலையை அனுப்பலாம் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

கூடுதல் விவரங்களுக்கு www.tngasa.in மற்றும் www.tngasa.orgஆகிய இணையதளங்களை காணலாம். மேலும், 044-28260098 , 044-28271911 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுப் பெறலாம் என்று உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Source link

By admin

Leave a Reply

Your email address will not be published.

Sorry, this option is disabled !
error: Content is protected !!